ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி கலெக்டர் சிவஞானம் வழங்கினார்


ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
x
தினத்தந்தி 11 May 2018 11:20 AM IST (Updated: 11 May 2018 11:20 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நல நிதிக்கான காசோலைகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட 31 கோரிக்கை மனுக்களுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஓய்வூதியதாரர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள இடர்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்க சென்னை ஓய்வூதிய துணை இயக்குனராலும், விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலராலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

மேலும் 8 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ.2¼ லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளையும், 6 ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 14 ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி மற்றும் மருத்துவ நல நிதிக்கான காசோலைகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் மரியஜோசப், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சரவணன், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story