மாவட்ட செய்திகள்

திருவாரூரில் இருந்து ரெயில் மூலம் குமரி மாவட்டத்துக்கு 1,200 டன் அரிசி மூடைகள் வந்தன + "||" + Kumari district had 1,200 tonnes of rice bundles

திருவாரூரில் இருந்து ரெயில் மூலம் குமரி மாவட்டத்துக்கு 1,200 டன் அரிசி மூடைகள் வந்தன

திருவாரூரில் இருந்து ரெயில் மூலம்
குமரி மாவட்டத்துக்கு 1,200 டன் அரிசி மூடைகள் வந்தன
திருவாரூரில் இருந்து 1,200 டன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தன.
நாகர்கோவில்,

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 1,200 டன் புழுங்கல் அரிசி மூடைகள் (முதல் தரம்) குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அரிசி மூடைகள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சரக்கு ரெயில் மூலம் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ரெயில் நேற்று மதியம் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அரிசி மூடைகள் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றும் பணி நடந்தது. இந்த பணிகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதிகாரி தகவல்

அதைத் தொடர்ந்து அரிசி மூடைகள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறக்கி வைக்கப்பட்டது.

மேலும், காப்புக்காடு மற்றும் உடையார்விளை ஆகிய இடங்களுக்கும் அரிசி மூடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை முடிந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு 1,200 டன் அரிசி மூடைகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இன்னும் அரிசி மூடைகள் வர இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.