மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரம் தந்தையின் நகைகளை திருடி காட்டில் வீசிய பெண் கைது + "||" + Steal father jewelry Girl in the forest Arrested

சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரம் தந்தையின் நகைகளை திருடி காட்டில் வீசிய பெண் கைது

சொத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரம்
தந்தையின் நகைகளை திருடி காட்டில் வீசிய பெண் கைது
சொத்தை பிரித்து கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையின் நகைகளை திருடி காட்டில் வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வசாய், 

சொத்தை பிரித்து கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையின் நகைகளை திருடி காட்டில் வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.20 லட்சம் நகைகள்

தானே மாவட்டம் பயந்தர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குப்தா. இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். திரும்பி வந்த போது குப்தா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து குப்தாவின் மூத்த மகள் மேனகா போலீசில் புகார் அளித்தார்.

மகளே திருடியது அம்பலம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்தா வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குப்தாவின் இளைய மகள் சுமன்(வயது28) தனது கணவர் உமாகாந்துடன் வந்து தந்தையின் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

நகைகளை காட்டில் வீசினார்

சுமனின் தந்தைக்கு 12 கடைகள் உள்பட பல சொத்துகள் உள்ளன. இதில் தனக்கு பங்கு தருமாறு சுமன் அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் தந்தை குப்தா அவருக்கு சொத்துகளை பிரித்து கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் தந்தைக்கு பாடம் புகட்ட விரும்பினார்.

எனவே அவர் சம்பவத்தன்று கணவருடன் வந்து வீட்டில் இருந்த தந்தை குப்தாவிற்கு சொந்தமான நகைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளார். இதில் கொஞ்சம் நகைகளை பயந்தர் பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகளில் தூக்கி எறிந்ததும் தெரியவந்துள்ளது.

போலீசார் காட்டில் வீசிய நகைகளில் சிலவற்றை மீட்டுள்ளனர். மேலும் அவர் வீட்டில் வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். தந்தை மீது இருந்த கோபத்தில், வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் சுமன் காட்டில் வீச இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.