மாவட்ட செய்திகள்

புனேயில் இளம்பெண் உடல் துண்டு, துண்டாக மீட்பு கூறு போட்டு வீசியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + In Pune Teen body piece, fragmented recovery

புனேயில் இளம்பெண் உடல் துண்டு, துண்டாக மீட்பு கூறு போட்டு வீசியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

புனேயில்
இளம்பெண் உடல் துண்டு, துண்டாக மீட்பு
கூறு போட்டு வீசியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புனேயில் துண்டு, துண்டாக இளம்பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.அவரை கொன்று கூறு போட்டுவீசியவர்களை போலீசார்தேடி வருகின்றனர்.
புனே,

புனேயில் துண்டு, துண்டாக இளம்பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.அவரை கொன்று கூறு போட்டுவீசியவர்களை போலீசார்தேடி வருகின்றனர்.

துண்டு, துண்டான உடல்

புனே லோகேகாவ் பாட்டில்வஸ்தி பகுதியில் நேற்றுமுன்தினம் ஒரு பெண் உடல் துண்டு, துண்டாக பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் விமான்நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடல் பாகங்களை கைப்பற்றினர். விசாரணையில், அது 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இருப்பினும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மர்மஆசாமிகள் அவரை கொடூரமான முறையில் கொன்று உடலை கூறு போட்டு வீசி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையான இளம் பெண்ணை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

கொலையாளிகள் பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.