மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Suicide by borrowing borrowing

கடன் தொல்லையால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீஞ்சூர்,

சோழவரத்தை அடுத்த நாராணம்பேடு பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 42). கொத்தனார். அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த சேகர் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேகரின் மனைவி சோழவரம் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில் தன்னுடைய கணவர், வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டார். ஆனால் கடன் தந்தவர்கள் மேலும் தர வேண்டும் என்று வற்புறுத்தியதாலேயே தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.