மாவட்ட செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் + "||" + The health insurance plan should be implemented

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 22-வது ஆண்டு விழாவையொட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோட்ட தலைவர் தேவகோட்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சின்னையா வரவேற்றார். வட்ட பொருளாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வானசுந்தரம், அமைப்பு செயலாளர் கன்னியப்பன், பொருளாளர் அன்பு, விழுப்புரம் மண்டல செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில், மின்வாரியம் ஓய்வூதியர் நலத்திட்டத்தில் உரிய மாற்றம் செய்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பண்டிகை முன்பணத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கருணை தொகை பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைமை மின் பொறியாளர் அமலோற்பவநாதன், உதவி நிர்வாக அலுவலர் மாணிக்கம், கோட்ட செயலாளர் மணி, பொருளாளர் தேவராஜன், நலநிதி செயலாளர் அன்பழகன், பொருளாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் லோகநாதன் நன்றி கூறினார்.