மாவட்ட செய்திகள்

ஆட்டோக்கள் மீது லாரி மோதி டிரைவர் பலி இன்னொரு டிைரவர் படுகாயம் + "||" + Lorry kills driver over the autos Another Driver Injury

ஆட்டோக்கள் மீது லாரி மோதி டிரைவர் பலி இன்னொரு டிைரவர் படுகாயம்

ஆட்டோக்கள் மீது லாரி மோதி டிரைவர் பலி
இன்னொரு டிைரவர் படுகாயம்
ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இன்னொரு டிரைவர் படுகாயம் அடைந்தார்.
மும்பை,

ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இன்னொரு டிரைவர் படுகாயம் அடைந்தார்.

ஆட்டோக்கள் மீது மோதியது

மும்பை, வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் நேற்று முன்தினம் காலை தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆட்டோ ஒன்று டேங்கர் லாரியின் இடது புறமாக முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பினார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்து கொண்டு இருந்த 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது.

ஆட்டோ டிரைவர் பலி

இந்தநிலையில் விபத்தில் சிக்கிய 2 ஆட்டோக்களும் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அந்த ஆட்டோக்களை ஓட்டி வந்த 2 டிரைவர்களும் படுகாயமடைந்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஆட்டோ டிரைவர் பரிஷ் சேக் (வயது 22) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். மற்றொரு ஆட்டோ டிரைவர் அப்துல் முகமதுவிற்கு (40) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர் அக்பரூதின் கலிபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.