கர்நாடக கடல் எல்லைக்கு வந்த விக்ரம் போர்க்கப்பல்


கர்நாடக கடல் எல்லைக்கு வந்த விக்ரம் போர்க்கப்பல்
x
தினத்தந்தி 15 May 2018 3:00 AM IST (Updated: 15 May 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற் படைக்கு சொந்தமான ஐ.ஜி.ஜி.எஸ். விக்ரம் போர்க்கப்பல் நேற்று கர்நாடக கடல் எல்லைக்கு வந்தது.

மங்களூரு,

சென்னையைச் சேர்ந்த தனியார் கப்பல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்திய கடற் படைக்கு புதிதாக ஐ.ஜி.ஜி.எஸ். விக்ரம் போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது. இந்த கப்பலின் சேவையை கடந்த மாதம் சென்னையில் வைத்து மத்திய மந்திரி சுபாஷ் பாம்ரே தொடங்கி வைத்தார்.

இந்த கப்பல் நேற்று கர்நாடக கடல் எல்லைக்கு வந்தது. அப்போது தட்சிண கன்னடா மாவட்ட கடலோர காவல் படையினரும், இக்கப்பலில் ஏறி, தங்கள் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் ரோந்து சென்றனர். பின்னர் கடலோர காவல் படை அதிகாரி சத்வன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் சார்பில் இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. மிகவும் சக்திவாய்ந்த என்ஜின்கள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன துப்பாக்கிகளும் இக்கப்பலில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இக்கப்பலில் 14 அதிகாரிகள், 88 ஊழியர்கள் என மொத்தம் 102 பேர் பயணம் செய்யலாம். இவ்வாறு சத்வன் சிங் கூறினார்.

Next Story