பறக்கும் டாக்சி விடுதி
ஊபர் மற்றும் ஓலா பறக்கும் கார்களை வாடகைக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றன.
உலகின் மிகப்பெரிய வாடகைக் கார் நிறுவனங்களான ஊபர் மற்றும் ஓலா போன்றவை விரைவில் பறக்கும் கார்களை வாடகைக்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதற்காக ஊபர் நிறுவனம் டல்லாஸ் நகரில், பறக்கும் கார்கள் வந்து இறங்கவும், கிளம்பிச் செல்லவும் வசதியாக ‘மெகா ஸ்கைபோர்ட்’ எனப்படும் ஹெலிப்பேடு தளத்தை உருவாக்கி வருகிறது. இதற்காக ஹம்ப்ரேஸ் அண்ட் பார்ட்னர்ஸ் ஆர்கிடெக்ட் என்ற நிறுவனம் நவீன மாதிரி கட்டிடங்களை வடிவமைத்துக் கொடுக்கிறது. படத்தில் பார்ப்பது அந்த கட்டிடத்தின் வரைபடம்தான். கொலோசியத்தை நினைவுபடுத்தும் இந்த கட்டிடம்போல இன்னும் 6 மாதிரி கட்டிடங்கள் திட்டத்தில் உள்ளன. முக்கிய நகரங்களில் இருந்து 100 மைல் தொலைவுக்கு சேவை வழங்கும் வகையில் பறக்கும் கார் தளங்கள் கட்டப்படுகின்றன. இந்த ஹெலிபேடு தளத்தில் பல்வேறு திசையில் இருந்து வந்து கார்கள் இறங்கும் வகையில் சிறிய ஓடுதளங்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளவும், கார்கள் தங்கும் தளமாகவும் இவை செயல்பட உள்ளன. திட்டங்களை எவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்றி போட்டியாளரை முந்திக் கொள்வது என்பதில் நிறுவனங்கள் ரகசியத்தன்மை கடைப்பிடித்து மும்முரம் காட்டி வருகின்றன என்பது நினைவூட்டத்தக்கது.
Related Tags :
Next Story