மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration of students' right to education

பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி,

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு,கூட்டமைப்பு அமைப்பாளர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கனகராஜ் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டுசெயலாளர் மனோகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விடகூடுதலாக பல மடங்குகல்விக் கட்டணத்தைவசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச கட்டாயக் கல்விஉரிமை சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத பாட புத்தகங்களைவைத்து மாணவர்களுக்குபாடம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப்பட்டியல் இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அரசின் கல்வி கட்டணப்பட்டியலை பெற்றோர், மாணவர்கள் பார்க்கும் வகையில், பள்ளியின் முகப்பில் வைக்காத தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொள்ளாச்சி தி.மு.க.நகர துணைசெயலாளர் கார்த்திகேயன், ம.தி.மு.க.நகர செயலாளர் துரைபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் மகாலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிசுப்பிரமணியம், ஆதித்தமிழர் பேரவைகோபால், மனிதநேய மக்கள்கட்சி ஷேக் அப்துல்லா, எஸ்.டி.பி.ஐ.அக்பர் அலி உள்படபல கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் பெண்ணாடம் அருகே பரபரப்பு
பெண்ணாடம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. பல்லடத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் சங்கங்கள் சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு ஜாக்டோ– ஜியோ ஆர்ப்பாட்டம்
எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ– ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.