பாளையங்கோட்டையில் சொத்து வரி பெயர் மாற்றம்–குடிநீர் இணைப்பு பெற சிறப்பு முகாம்
பாளையங்கோட்டையில் நடந்த சிறப்பு முகாமில் 241 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
நெல்லை,
பாளையங்கோட்டையில் நடந்த சிறப்பு முகாமில் 241 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சிறப்பு முகாம்நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் சொத்து வரி பெயர் மாற்றம், புதிய வரிவிதிப்பு, காலிமனை வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவற்றுக்காக சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) நாராயணன் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் அய்யப்பன் முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு அனுமதி, கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்தனர். இந்த விண்ணப்பங்கள் உடனே பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
241 பேருக்கு ஆணைகள்இதில் சொத்துவரி பெயர் மாற்றம் 31 பேருக்கும், புதிய சொத்துவரி விதித்தலுக்கு 25 பேருக்கும், புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு 52 பேருக்கும், புதிய பாதாளசாக்கடை இணைப்பு பெறுவதற்கு 22 பேருக்கும், காலிமனை வரிவிதிப்பு 10 பேருக்கும், பட்டா பெயர் மாற்றம் 8 பேருக்கும் மற்றும் இதர சான்றிதழ்கள் பெறுவதற்கு என மொத்தம் 241 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனர் கண்ணதாசன், நிர்வாக அலுவலர் சங்கரி, சுகாதார அலுவலர் ஏ.சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.