இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 4:45 AM IST (Updated: 19 May 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி,

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைத்தலைவர் பாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், தமிழ் குமரன் விவசாயசங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் கே.மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நியூட்ரீனோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆற்று மணல், தாதுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களை பாதுகாத்து தமிழகம் பாலைவனமாவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கலை இலக்கிய மாவட்ட செயலாளர் ரவீந்திரபாரதி, மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜா, நிர்வாகிகள் சதீஷ், மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட நிர்வாகி பரமசிவம் நன்றி கூறினார்.

Next Story