ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 9:45 PM GMT (Updated: 2018-05-31T00:46:44+05:30)

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சிவில் உரிமை கழக மாநில தலைவர் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார்.

திராவிடர் விடுதலைக்கழக மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி கலந்துகொண்டு பேசினார். இதில் ம.தி.மு.க. மாநில பொருளாளர் கணேசமூர்த்தி, தமிழக பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம், வக்கீல் ப.பா.மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story