அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-31T01:04:36+05:30)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் அரண்மனை முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் முகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் உமர் காசிம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணை தலைவர் குருவேல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்து முருகன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் ராஜரத்தினம் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story