மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்2 டிரைவர்கள் கைது + "||" + 2 trucks seized by sand from Andhra Pradesh

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்2 டிரைவர்கள் கைது

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்2 டிரைவர்கள் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பொம்மாஜிகுளம் சோதனைச்சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே ஆந்திராவில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான 2 லாரிகளை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். மேற்கண்ட லாரிகளில் உரிய அனுமதியின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்களான ஆந்திர மாநிலம் வரதையாபாளையத்தைச் சேர்ந்த சேகர்(வயது 27) மற்றும் நெல்லூரைச் சேர்ந்த ரமேஷ் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மணலுடன் 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.