வாகனங்கள் செல்லாமல் தடுக்க கரையோரத்தில் பள்ளம் தோண்டும் பணி


வாகனங்கள் செல்லாமல் தடுக்க கரையோரத்தில் பள்ளம் தோண்டும் பணி
x
தினத்தந்தி 8 Jun 2018 11:01 PM GMT (Updated: 8 Jun 2018 11:01 PM GMT)

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வாகனங்கள் செல்லாமல் தடுக்க கரையோரத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கீழ் பாலப்பட்டி மற்றும் கூடுதுறை காவிரி ஆற்றுப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மணல் அள்ளி லாரி, மோட்டார்சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி செல்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் மணல் கடத்தலை தடுப்பது குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வாகனங்கள் ஆற்றுக்குள் செல்லாமல் தடுக்க கரையோர பகுதிகளில் பள்ளம் தோண்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாகனங்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக மணல் கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story