மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Petrol and diesel price hike Man labor workers demonstrated

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை,

உடுமலை தாலுகா உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிர்நீத்த மக்களின் குடும்பத்திற்கு நஷ்டஈட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையோரம் விவசாய நிலங்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் எம்.கருப்புசாமி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஜோதிக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.ராமசாமி, துணை செயலாளர் பி.சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் சி.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் எம்.குணசேகரன், பொருளாளர் ஜி.செல்வராஜ், தலைவர் எம்.நந்தகோபால், இ.பி.எப். பென்சனர் சங்க செயலாளர் எம்.ஆறுமுகம் உள்பட பலர் பேசினார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
3. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 7 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாணவர் காங்கிரசார் சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
5. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.92க்கு விற்பனை
பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 19 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.92க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.