மவுசு பெறும் சில்வர் பொருட்கள்


மவுசு பெறும் சில்வர் பொருட்கள்
x
தினத்தந்தி 10 Jun 2018 6:33 AM GMT (Updated: 10 Jun 2018 6:33 AM GMT)

கேரள மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் ஊழியர்களுக்கு டீ பருகும் டம்ளர்கள், ஸ்நாக்ஸ் பரிமாறும் தட்டுகள், குடிநீர் ஜாடிகள் போன்றவை சில்வர் பாத்திரங்களாக வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பேனாக்களுக்கு மாற்றாக மை பேனாக்களை பயன் படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கு அரசு அதிகாரிகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுசித்வா மிஷன், ஹரிதா கேரளம் மிஷன் போன்ற நிறுவனங்கள் செய்துவருகின்றன. இவை கழிவு மேலாண்மை, இயற்கை வேளாண்மை, நீர்வள மேலாண்மை, சுத்திகரிப்பு, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை போன்றவற்றை கையாள்வதற்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களாகும்.

‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தி தூய்மையான சூழலுக்கு வழிவகுப்பதற்கு அரசாங்க துறைகள் எடுத்துக்காட்டாக விளங்குவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்கிறார் சுசித்வா மிஷன் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அஜய் குமார் வர்மா. கேரளாவில் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது.

அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் அதிகாரிகள் அவர் களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்து வதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தற்போது மாநிலத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத அரசு அலுவலகங்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்க தயாராகிவிட்டார்கள். மற்ற நிறுவனங்களிலும் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டுவிடும் என நம்பு கிறார்கள். 

Next Story