மாவட்ட செய்திகள்

பீகார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது + "||" + Bihar youth Two people arrested for molestation

பீகார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

பீகார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெங்காடு பகுதியில் அறை எடுத்து தங்கி கொண்டு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். பீகார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்தார்.
வாலாஜாபாத்,

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரம் தாலுகாவை சேர்ந்தவர் இந்திரஜித் பஸ்வான் (வயது 31). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெங்காடு பகுதியில் அறை எடுத்து தங்கி கொண்டு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தன்னை கத்தியால் மிரட்டி ரூ.1,500-ஐ பறித்து சென்றுவிட்டதாக இந்திரஜித் பஸ்வான் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு காலனியை சேர்ந்த சாந்தகுமார் (வயது 26), வினோத் (27), என்பதும் அவர்கள் இந்திரஜித் பஸ்வானிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.