சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது திருநாவுக்கரசர் பேச்சு
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது என வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், ஐ.என். டி.யு.சி. உப்புத் தொழிலாளர்கள் சங்க துணை தலைவர் குமரவேல், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்நாதன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் சிவபிரகாசம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-
நடிகர்கள் முதல்-அமைச்சராக முடியாது
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர். போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் யாரும் முதல்-அமைச்சராக முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சி தலைவர்கள் பணியாற்ற வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு பொய்களை சொல்லி மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்களை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்றார்.

Related Tags :
Next Story