குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும்


குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 5:01 AM IST (Updated: 13 Jun 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும் என ரிக்சா யூனியன் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

மும்பை,

மும்பை புறநகர் பகுதியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.18 பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஆட்டோ கட்டணத்தை ரூ.20 ஆக நிர்ணயிக்க வேண்டும் என ரிக்சா யூனியன் தலைவர் தம்பி குரியன் என்பவர் மாநில போக்குவரத்துதுறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:-

‘‘மும்பையில் கடந்த 3 வருடமாக ஆட்டோ கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது எரிபொருள்களின் விலை அதிகமாக உயர்ந்து உள்ளது. மகாநகர் கியாஸ் நிறுவனம் சி.என்.ஜி. கியாஸ் விலையை கிலோவுக்கு 1 ரூபாய் 51 பைசா உயர்த்தி உள்ளது.

எனவே ஆட்டோ டிரைவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக தற்போது, உள்ள ரூ.18 என்ற குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்த வேண்டும்.

இதில், அரசு காலதாமதம் செய்தால் கோர்ட்டை அணுகுவோம்’’

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story