தங்கையின் திருமணம் தள்ளிப்போவதால் விரக்தி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தங்கையின் திருமணம் தள்ளிப்போவதால் தனது திருமணமும் தள்ளிப்போகிறதே என விரக்தி அடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ராஜாசண்முகம் நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(வயது 29). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
இவரது தங்கைக்கு பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் இதுவரை சரியான வரன் அமையவில்லை. தங்கையின் திருமணம் தள்ளிப்போவதால், தனது திருமணமும் தள்ளிப்போகிறதே என சுப்பிரமணியன் வருத்தத்தில் இருந்து வந்தார்.
தற்கொலை
இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு அவரது பெற்றோர், அவரை கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சுப்பிரமணியன், கடந்த 9–ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுப்பிரமணியனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story