சைக்கிள் ஓட்டினால் பரிசு!


சைக்கிள் ஓட்டினால் பரிசு!
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 29 Jun 2018 11:06 AM IST)
t-max-icont-min-icon

நெதர்லாந்து நாட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அந்நாட்டு மக்கள் சைக்கிள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்குகிறது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் குடிமக்கள் தமது அன்றாடச் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதை பல நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

மேலைநாட்டு நகரங்களில் குறுகிய தூர போக்குவரத்துக்கு சைக்கிளைப் பயன்படுத்துவோருக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

வளர்ந்த நாடுகளான ஜப்பான், கனடா, பிரான்ஸ், டென்மார்க் போன்றவற்றில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் சைக்கிளில் பயணிப்பது சாதாரணமான காட்சி.

இந்த விஷயத்தில், நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. அதாவது, பணியிடத்துக்கு சைக்கிளில் செல்லும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 0.22 அமெரிக்க டாலர் (ரூ. 15) பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், நெதர்ந்து நாட்டின் அடிப்படை வசதிகளுக்கான துணை அமைச்சர் தின்ஜே வான் வெல்டோவெனால் இத்திட்டம் முன்மொழியப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, சைக்கிள் ஓட்டும் கலாச்சாரம் நெதர்லாந்து மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகி இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் சைக்கிள் பயன்படுத்துவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அரசானது சைக்கிள்களுக்கான பிரத்தியேக சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சைக்கிள் நிறுத்தும் சிறப்பிடங்களை அமைக்கவும் 100 மில்லியன் யூரோக்களை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

Next Story