ராஜபாளையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரெயில் விட வேண்டும் மத்திய மந்திரியிடம் தங்கப்பாண்டியன் மனு


ராஜபாளையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரெயில் விட வேண்டும் மத்திய மந்திரியிடம் தங்கப்பாண்டியன் மனு
x
தினத்தந்தி 4 July 2018 10:45 PM GMT (Updated: 4 July 2018 7:44 PM GMT)

ராஜபாளையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

ராஜபாளையம்,

சென்னை வந்திருந்த மத்திய ரெயில்வே மந்திரி மனோஜ் சின்காவை ராஜபாளையம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.நேரில் சந்தித்து பேசி ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ராஜபாளையம் தொகுதியில் அதிக அளவில் வியாபாரிகள், மில் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பஸ் கட்டணம் உயர்வு காரணமாக ரெயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் உள்ளது. ஆகையால் மதுரை முதல் ராஜபாளையம், ராஜபாளையம் முதல் மதுரைக்கு பயணிக்க கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் ராஜபாளையம் தொகுதியில் உள்ள தளவாய்புரத்தில் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், சூரத், மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்று வரும் வகையில் வட மாநிலங்களுக்கு ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த சந்திப்பின் போதுதெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து தங்கப்பாண்டியன் கூறுகையில், மத்திய மந்திரி இந்த கோரிக்கையை பரிசீலித்து ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

Next Story