மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு + "||" + Public transport road traffic damage with drinking water and drinking water

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
மீமிசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை மற்றும் துத்தனேந்தல் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாயத்து மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வண்டிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று அரசங்கரையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை
குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
2. திருத்தங்கல் பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.
3. சேதமடைந்த பாலத்தின் மேல்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் உடையாமல் இருக்க இரும்பு பட்டைகள் அமைக்கும் பணி
சேதமடைந்த பாலத்தின் மேல்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் உடையாமல் இருக்க இரும்பு பட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
4. விவேகானந்தா நகரில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொது மக்கள் முடிவு
மாத்தூர் ஊராட்சி விவேகானந்தா நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
5. குடிநீர் வழங்கக்கோரி ஊரை காலி செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
குடிநீர் வழங்கக்கோரி ஊரை காலி செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.