பாராளுமன்றத்துடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் மூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு


பாராளுமன்றத்துடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் மூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 8 July 2018 3:15 AM IST (Updated: 8 July 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று மூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை, ஜூலை.7-

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பரந்தாமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி வாரியாக தி.மு.க. கமிட்டி உடனடியாக அமைக்கப்படும். கடந்த தேர்தலை விட, தற்போது வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


ஒவ்வொரு வாக்குச்சாவடி கமிட்டியிலும் 5 இளைஞரணியினர், 5 மகளிரணியினர் உள்பட 20 பேர் இடம் பெற வேண்டும். மேலும் அவர்கள் அனைவரும் அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக இருத்தல் வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க.வை அமோக வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே அனைவரும் முழு வீச்சில் தேர்தல் பணியினை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story