அந்தேரி ரெயில்வே நடைமேம்பால விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

அந்தேரி ரெயில்வே நடைமேம்பால விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 8 July 2018 5:00 AM IST (Updated: 8 July 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் காயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை,

அந்தேரி ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் காயம் அடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

5 பேர் காயம்

மும்பையில் கனமழை காரணமாக கடந்த 3-ந் தேதி அந்தேரி பகுதியில் கோகலே ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

இதில் அஸ்மிதா காட்கர்(வயது36) என்ற பெண் உள்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிசிச்சை பலனின்றி சாவு

அஸ்மிதா காட்கர் கூப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 6.50 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஸ்மிதா காட்கர் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story