பா.ஜனதா சார்பில் வகித்து வந்த எம்.எல்.சி. பதவியை மந்திரி மகாதியோ ஜான்கர் ராஜினாமா செய்தார்
பா.ஜனதா சார்பில் வகித்து வந்த எம்.எல்.சி. பதவியை மகாதியோ ஜான்கர் ராஜினாமா செய்தார்.
நாக்பூர்,
பா.ஜனதா சார்பில் வகித்து வந்த எம்.எல்.சி. பதவியை மகாதியோ ஜான்கர் ராஜினாமா செய்தார்.
சொந்த கட்சியில்...
கால்நடை துறை மந்திரியாக இருப்பவர் மகாதியோ ஜான்கர். ராஷ்டிரிய சமாஜ் கட்சியை சேர்ந்த இவர் கூட்டணி கட்சியான பா.ஜனதா சார்பில் மேல்-சபை உறுப்பினர்(எம்.எல்.சி.) பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் சொந்த கட்சி சார்பில் மேல்-சபைக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். எனவே தான் வகித்து வந்த மேல்-சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ராஜினாமா செய்த தகவலை நேற்று மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் சபையில் அறிவித்தார்.
இதுகுறித்து மகாதியோ ஜான்கர் தெரிவிக்கையில், “வரும் ஜூலை 16-ந் தேதி நடைபெறும் மேல்-சபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நான் சொந்த கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். எதாவது பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
பா.ஜனதாவுக்கு 5 எம்.எல்.சி.
முதல்முறை நான் எம்.எல்.சி. பதவிக்கு போட்டியிட்டபோது எனக்கு எப்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது என தெரியவில்லை. இதனால் நான் பா.ஜனதா சார்பில் போட்டியிட வேண்டியதாகிவிட்டது ” என்றார்.
தற்போது உள்ள சட்டசபை உறுப்பினர்களின் பலத்தை பொறுத்து பா.ஜனதா சார்பில் 5 எம்.எல்.சி.க்கள் எளிதாக வெற்றிபெற முடியும். மேலும் சிவசேனா சார்பில் 3 பேரும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் தேர்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரிகிறது.
Related Tags :
Next Story