ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தர்ணா


ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 10 July 2018 10:30 PM GMT (Updated: 10 July 2018 8:40 PM GMT)

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று காலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தியதுபோல் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தக்கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று காலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். விநாயகவேல் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஆனந்தகணபதி, ராமச்சந்திரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தனர்.

புதுவை பெரியார் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அலைகள் இயக்க அமைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் விடுதலைக்கழக ஒருங்கிணைப்பாளர் கோகுல் காந்திநாத் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஆசைத்தம்பி, அந்தோணி, அந்துவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை அலைக்கழிக்கும் தனியார் ஓட்டல் மேனேஜ்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்தும், இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story