மாவட்ட செய்திகள்

நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி + "||" + Training on disciplinary activities for government officials through the Administrative Reforms Department

நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி

நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி
நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடி பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு அலுவலர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் தேவையான விவரங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் ரெகொபெயாம், பிரிவு அலுவலர்கள் ஜெகதீஷ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன், ஆய்வுக்குழு துணை அலுவலர் கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 13-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
2. திருக்கோவிலூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது
திருக்கோவிலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
3. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.
4. பட்டு வளர்ச்சித்துறை மூலம் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. வெள்ளப்பெருக்கால் உடைந்த ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்
மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை