பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 12 July 2018 3:38 AM IST (Updated: 12 July 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா விளக்கணாம்பூடிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டையை நோக்கி சென்று கொண்டு இருந்தார். வழியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story