பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார்.
பொன்னேரி,
இவர் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிப்பதற்காக இதே ஊரை சார்ந்த முகமதுஅலி, அஷ்ரப், சாகுல்அமீது ஆகியோருடன் படகில் பழவேற்காடு கடலுக்கு சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 4 பேரும் தவறி கடலில் விழுந்தனர்.
கடலில் தத்தளித்த முகமதுஅலி, அஷ்ரப், சாகுல்அமீது ஆகியோரை அந்த பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் மூழ்கிய மீனவர் நஜீருதீன் உயிரிழந்த நிலையில் மீட்கப்படடார்.
தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நஜீருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியான கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கியது ஜமிலாபாத் மீனவ கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் நஜீருதீன் (வயது 32).
இவர் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிப்பதற்காக இதே ஊரை சார்ந்த முகமதுஅலி, அஷ்ரப், சாகுல்அமீது ஆகியோருடன் படகில் பழவேற்காடு கடலுக்கு சென்றார். அப்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 4 பேரும் தவறி கடலில் விழுந்தனர்.
கடலில் தத்தளித்த முகமதுஅலி, அஷ்ரப், சாகுல்அமீது ஆகியோரை அந்த பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். கடலில் மூழ்கிய மீனவர் நஜீருதீன் உயிரிழந்த நிலையில் மீட்கப்படடார்.
தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நஜீருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story