மாவட்ட செய்திகள்

தொப்பூரில் விபத்து: லாரி மீது கார் மோதல்; வியாபாரி பலி குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் + "||" + Accident in car accident: car collision on truck Eight people, including a businessman, were injured

தொப்பூரில் விபத்து: லாரி மீது கார் மோதல்; வியாபாரி பலி குழந்தை உள்பட 8 பேர் படுகாயம்

தொப்பூரில் விபத்து: லாரி மீது கார் மோதல்; வியாபாரி பலி குழந்தை உள்பட 8 பேர் படுகாயம்
தொப்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார். குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேமுகண்டபள்ளியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28). இவர் நாமக்கல்லில் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்தார்.

தமிழ்செல்வன் சொந்தஊருக்கு சென்று விட்டு நாமக்கல்லுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் சோமு ஓட்டினார்.


நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கார் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பழைய சுங்கச்சாவடி அருகே வந்தபோது ரோட்டின் ஓரத்தில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு கொண்டு சென்ற லாரியை டிரைவர் அங்கு நிறுத்தி இருந்தார்.

கார் அங்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் தமிழ்செல்வன், தமிழ்செல்வனின் உறவினர் தேவி (27), சுகன்யா (8), தனுசியா (7), ரித்தீஷ் (9), சேவிகா (4), சன்யா (2), டிரைவர் சோமு, 6 மாத குழந்தை வினோத் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தமிழ்செல்வன் இறந்தார். மற்றும் 8 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.