மாவட்ட செய்திகள்

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்– மொபட் மோதல்; ஒருவர் பலி + "||" + Near Kadayanallur Motorcycle-moped conflict; Kills one

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்– மொபட் மோதல்; ஒருவர் பலி

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்– மொபட் மோதல்; ஒருவர் பலி
கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்– மொபட் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

கடையநல்லூர், 

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்– மொபட் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

செங்கல் சூளை அதிபர்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பகசுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 51). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் ரெயில்வே பீடர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மாரியப்பன் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

சாவு

இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.