மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம் + "||" + In Thoothukudi district, Today is a publicly-trained special camp

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோகத்திட்ட சிறப்பு முகாம்
பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் மாதம் தோறும் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, 

பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் மாதம் தோறும் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்துக்கான முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில், அதற்கென நியமிக்கப்பட்டு உள்ள மேற்பார்வை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது.

முகாமில் மின்னணு ரே‌ஷன் கார்டில்முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதம் அடைந்துள்ள அல்லது தொலைந்து போன மின்னணு ரே‌ஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு ரே‌ஷன் கார்டு பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரி செய்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்னணு குடும்ப அட்டையில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.