மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி கல்லூரி மாணவர் கைது + "||" + ATM. Break the machine Try the robbery College student arrested

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி கல்லூரி மாணவர் கைது

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி கல்லூரி மாணவர் கைது
ராயப்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

சென்னை ராயப்பேட்டை அமீர் மகால் அருகே ஐ.சி.ஐ. சி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். உடனே ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது.


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை அலுவலகத்திலும் அலாரம் அடித்தது. உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் அலாரம் சத்தம்கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அண்ணாசாலை போலீசாரும் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஷேக் சுலைமான் பாஷா (வயது 20) என்பதும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், குடிபோதையில் இருந்த அவர் ஏ.டி.எம். மையம் அருகில் இருந்த 2 கடைகளிலும் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் இரவு மாம்பலத்திலும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி மாணவர் ஷேக் சுலைமான் பாஷாவை அண்ணாசாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.