பெற்றோர் சைக்கிள் வாங்கி தராததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெற்றோர் சைக்கிள் வாங்கி தராததால் மனம் உடைந்த பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மகள் சிந்து(வயது 15). கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தனக்கு புதிதாக சைக்கிள் வாங்கி தரும்படி தனது பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.
சைக்கிள் வாங்கி தரும் சூழ்நிலை தற்போது இல்லாததால் பிறகு வாங்கி தருவதாக அவரது பெற்றோர் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பெற்றோர் தனக்கு சைக்கிள் வாங்கி தராததால் மனம் உடைந்த பள்ளி மாணவி சிந்து நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தனியறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story