மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேட்டி + "||" + Dr. Ramadoss's interview should bring the ballot in the parliamentary election

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம், தர்மபுரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி தலைமை தாங்கினார். பா.ம.க. துணை பொதுச்செயலாளர் அருள் வரவேற்று பேசினார். துணை பொதுச்செயலாளர்கள் கண்ணையன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.


இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற அயராது பாடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர்கள் கதிர்.ராசரத்தினம், அண்ணாதுரை, ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு நிறைய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். ஆனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கி செல்கிறது. மோட்டார் வாகன துறையில் கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு வந்து இருக்க வேண்டும். ஊழல் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவிற்கு சென்று இருக்கிறது.

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டம் அதிகம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? ஊழல் அதிகமாக நடந்து இருக்கிறதா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசிடம் இருந்து ரூ.3,558 கோடி நிதி வரவில்லை.

ஜி.எஸ்.டி. வரியால் கடந்த ஒரு ஆண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்த 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்கிறார்கள். 10 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மறுமதிப்பீட்டில் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது. எனவே ஊழல் குறித்து சி.பி.ஐ. தலைமையில் பல்துறை வல்லுனர்கள் குழு விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். மேலும் பல்கலைக்கழக ஊழல் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் கவர்னரை சந்தித்து அறிக்கை கொடுக்க உள்ளோம்.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை தேவை என்று காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட 17 கட்சிகள் வலியுறுத்துகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மேட்டூர் அணையை தூர் வார வேண்டும். அணையின் மொத்த கொள்ளளவு 94 டி.எம்.சி. தண்ணீர். ஆனால் தற்போது 60 முதல் 65 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது. மீதி சேறும், சகதியுமாக உள்ளது. 15 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

சேலம் மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி பொதுக்குழு கூடி முடிவு அறிவிக்கப்படும். அன்புமணி ராமதாஸ் பிரதமர் வேட்பாளர் இல்லை. மேட்டூரில் இருந்து கடைமடை வரை எந்த இடத்திலும் தடுப்பணை கட்ட இயலாது என்று அறிவிப்பு குறித்து விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயார்.

இவ்வாறு அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தெளிவு இல்லாமல் செயல்படுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி
ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
4. பெண்கள் பாதுகாப்புக்காக புதிய இயக்கம் தொடங்கப்படும் மாதர் சங்க மாநில பொது செயலாளர் பேட்டி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு கரூரில் நேற்று நடந்தது. இதற்கு மாநில பொது செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார்.
5. நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி
நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.