மாவட்ட செய்திகள்

புழல் சிறையில் நள்ளிரவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கைதி + "||" + at Puzhal prison The prisoner who attempted suicide on the tank

புழல் சிறையில் நள்ளிரவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கைதி

புழல் சிறையில் நள்ளிரவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கைதி
புழல் சிறையில் நள்ளிரவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கைதி, பிளாஸ்டிக் குழாய் உடைந்து கீழே விழுந்ததில் விலா எலும்பு முறிந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்குன்றம்,

சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). திருட்டு வழக்கில் கோயம்பேடு போலீசாரால் மே மாதம் கைது செய்யப்பட்டஅவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கார்த்திக், தூங்காமல் சிறை வளாகத்தில் சுற்றி உள்ளார். இதை பார்த்த சிறைக்காவலர்கள் அவரை படுத்து தூங்குமாறு கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் சிறைக்காவலர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கார்த்திக், சிறையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, பிளாஸ்டிக் குழாயை பிடித்து மேலே ஏறினார். அப்போது பாரம் தாங்காமல் அந்த பிளாஸ் குழாய் உடைந்ததால் கார்த்திக் கீழே விழுந்தார்.

இதில் அவரது விலா எலும்பு முறிந்தது. வலியால் அலறி துடித்த அவரை சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் மற்றும் சிறைக்காவலர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை
மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் படுத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி
விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனைவியையும் போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
4. சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
5. திருக்கோவிலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு
திருக்கோவிலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.