மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது + "||" + A baby girl born in ambulance has a beautiful baby girl

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது
மூன்றடைப்பு அருகே, ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
திசையன்விளை,நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் அந்தோணி நில்சன்ராஜ். இவருடைய மனைவி வினிதா (வயது 25).

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவ வலி காரணமாக நேற்று திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மூன்றடைப்பு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது வினிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலையோரத்தில் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர் வினிதாவும், அவரது குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி மற்றும் டிரைவர் கல்யாணசுந்தரம் ஆகியோரை டாக்டர்கள் பாராட்டினர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்; நோயாளி உள்பட 4 பேர் பலி
ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
2. ஆம்புலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போலீஸ்காரர்!
ஆம்புலன்ஸ் இல்லாததால் பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை போலீஸ்காரர் ஒருவர் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த மனிதாபிமானம் மிக்க சம்பவம் நடந்துள்ளது.
3. நாகர்கோவிலில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு - அதிகாரி விசாரணை
நாகர்கோவிலில் பச்சிளம் பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி
காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
5. தெலுங்கானாவில் கடத்தப்பட்டு கர்நாடக மருத்துவமனையில் கிடந்த பிறந்து 6 நாளேயான பெண் குழந்தை மீட்பு
தெலுங்கானாவில் பெண் ஒருவரால் கடத்தப்பட்ட பிறந்து 6 நாளேயான பெண் குழந்தை கர்நாடகாவிலுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டது.