மாவட்ட செய்திகள்

பெண் டாக்டரை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிய முதியவர் தற்கொலை + "||" + Make a girl doctor Old man who escaped Suicide

பெண் டாக்டரை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிய முதியவர் தற்கொலை

பெண் டாக்டரை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிய முதியவர் தற்கொலை
பெண் டாக்டரை மானபங்கம் செய்து விட்டு தப்பி ஓடிய முதியவர் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலாடில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,

மும்பை கோரேகாவ் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 35 வயது பெண் டாக்டர் ஒருவர் தாயுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பெண் டாக்டர் வீட்டில் தனியாக இருந்தார். காலை 10.30 மணியளவில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிரில் (வயது61) என்ற முதியவர் பெண் டாக்டர் வீட்டின் காலிங் பெல்லை அடித் தார். பெண் டாக்டர் கதவு இடைவெளி வழியாக என்ன வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அப்போது முதியவர் பேச வேண்டும் என கூறினார்.


இதையடுத்து பெண் டாக்டர் கதவை திறந்து அவரை உள்ளே வருமாறு கூறினார். வீட்டின் உள்ளே வந்த முதியவர் பெண் டாக்டர் மீது பாய்ந்து அவரை மானபங்கம் செய்தார். பெண் டாக்டர் அவரை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர் சுத்தியலால் பெண் டாக்டரை பயங்கரமாக தாக்கினார். இதில் அவரது தலை, காலில் காயம் ஏற்பட்டது. பெண் டாக்டர் வலியால் அலறினார். மேலும் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதனால் பயந்து போன முதியவர் அங்கு இருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்தநிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண் டாக்டரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பெண் டாக்டரை மானபங்கம் செய்தது வெளியே தெரிந் ததால் முதியவர் அவமானம் அடைந்தார். எனவே அவர் மலாடில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை போலீசார் சித்தார்த் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார்.

பெண் டாக்டரை மானபங்கம் செய்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலாடில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.