மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் + "||" + Share Auto drivers in Perambalur also went on strike

பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

ஆட்டோ தொழிலாளர் களின் உரிமைகளையும், பொதுமக்களின் நலனுக்கு எதிராக 63 சரத்துக்களை கொண்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகள் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தின்படி 1992-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஷேர் ஆட்டோக்களை இயக்க கூடாது. உரிய காலத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறாவிட்டால் 5 மடங்கு அபராதம் விதிப்பது. மக்களுக்கு சேவையாக இருந்து வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக செயல்பாடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரித்துக்கொடுப்பதை கைவிட வலியுறுத்தியும், ஆட்டோக் களுக்கு விதிக்கப்படும் காப்பீடு பிரிமிய தொகையை உயர்த்தியதை கைவிட்டு பிரிமியம் செலுத்தும் தொகையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் பெரம்பலூர் நகரில் 400-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகளில் அதிக வாகன போக்குவரத்தின்றி காணப்பட்டது. மினி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் 3 பிளஸ் 1 பயணிகள் ஆட்டோ, ரிக்‌ஷா மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்களது ஆட்டோக்களை இயக்கினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் புதிய பஸ்நிலையத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் காரணமாக பழைய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

சாலைபாதுகாப்பு விதி முறைகள் சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. இது தவிர மெக்கானிக், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்தத்திற்கு இடையே நேற்று காலை காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் மெக்கானிக் தொழிலாளர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலையில் போலீஸ் குவிப்பு, சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு
பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் பெண்கள் உள்பட 65 பேர் கைது
திருவாரூரில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேசியவாத காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் பா.ஜனதா அலுவலகம் மீது கேரட்டை வீசியதால் பரபரப்பு உண்டானது.
4. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்
புதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.