கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலி


கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Aug 2018 3:15 AM IST (Updated: 8 Aug 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கிணறு தோண்டும் பணியின் போது மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

திருக்கோவிலூர், 



இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திருக்கோவிலூர் அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அதே ஊரை சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 43) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து தோண்டிய மண்ணை வெளியே எடுக்கும் பணியில் முருகன் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மண் சரிந்து முருகன் மீது விழுந்தது. இதில் முருகன் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து திருப்பாலபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் மண்சரிந்து விழுந்ததில் இறந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணறு தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story