மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கள் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
மதுரை,
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக் கோரியும், மாநில அரசின் உரிமையைப் பறிப்பதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 300–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் லாரி, ஆட்டோ, வேன் சங்கங்கள் கலந்துகொண்டன. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவர். எனவே இந்த சட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story