செம்மினிப்பட்டியில் கருணாநிதி உருவபொம்மைக்கு கிராமமக்கள் இறுதிச்சடங்கு பெண்கள் ஒப்பாரி பாடல்பாடி அஞ்சலி


செம்மினிப்பட்டியில் கருணாநிதி உருவபொம்மைக்கு கிராமமக்கள் இறுதிச்சடங்கு பெண்கள் ஒப்பாரி பாடல்பாடி அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 9:30 PM GMT (Updated: 8 Aug 2018 8:18 PM GMT)

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிப்பட்டியில் கருணாநிதிக்கு பெண்கள் ஒப்பாரி பாடல்பாடி அஞ்சலி செலுத்தினர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிப்பட்டி ஊராட்சிக்குஉட்பட்ட காமராஜபுரம் காலனி பொதுமக்கள் முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி இறந்தசெய்தியை கேட்டவுடன் இரவு முழுவதும் அங்குள்ள மந்தைபகுதியில் சோகபாடல்கள் ஒலிபரப்புசெய்தனர். அதன்பின் அவருடைய உருவபடத்திற்கு மாலைஅணிவித்து பெண்கள் ஒப்பாரி பாடல்பாடி அஞ்சலினர். நேற்றுமாலை 4 மணிக்கு தாரைதப்பட்டையுடன் பாடைகட்டி கருணாநிதி உருவபொம்மைக்கு மாலைஅணிவித்து பூக்களால் அலங்கரித்து பட்டாசுவெடித்து ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இதில் 5 பேர் நீர்மாலை எடுத்து மொட்டை போட்டுக்கொண்டனர். ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள் உள்பட கட்சிபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Next Story