மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே இன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு + "||" + Near Kayatthru Which was to be held today Road fight withdrawal

கயத்தாறு அருகே இன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கயத்தாறு அருகே இன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
கயத்தாறு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கயத்தாறு, 

கயத்தாறு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சமாதான பேச்சுவார்த்தை 

கயத்தாறு அருகே சிவஞானபுரம், வில்லிசேரி, தளவாய்புரம் வழியாக செல்லும் நாற்கர சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே தளவாய்புரம் விலக்கு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அங்குள்ள குறுகிய பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். சாலையின் நடுவில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில், தளவாய்புரம் விலக்கு சந்திப்பு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் நேற்று காலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் லிங்கராஜ் தலைமை தாங்கினார்.

சாலைமறியல் வாபஸ் 

தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர் காளியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் அய்யலுசாமி, வட்டார தலைவர் செல்லத்துரை, நகர தலைவர் பாடாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாற்கர சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வர். மேலும் அவர்கள், இதுதொடர்பாக கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் வருகிற 13–ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.