நெல்லையில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின கடைகள் திறக்கப்பட்டன; இயல்பு வாழ்க்கை திரும்பியது
நெல்லை மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் ஓடின. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் ஓடின. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கருணாநிதி மறைவுதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7–ந்தேதி மாலையில் மரணம் அடைந்தார். அவருடைய மறைவையொட்டி நெல்லை மாவட்டத்தில் அன்று இரவு முதல் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தியேட்டர்களில் சினிமாப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்றும் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நெல்லை மாநகரிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகரில் உள்ள முக்கிய சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பஸ்கள் ஓடினஇந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் வழக்கம் போல் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள் ஓடின. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கின. பெட்ரோல் பங்க்குகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.