2 மாநகராட்சி அதிகாரிகள் பணி இடைநீக்கம்


2 மாநகராட்சி அதிகாரிகள் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2018 5:48 AM IST (Updated: 12 Aug 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத 2 மாநகராட்சி அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை அந்தேரி கே மேற்கு வார்டு பகுதியில் சட்டவிரோதமாக பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வார்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் அந்த கட்டுமானங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இந்த நிலையில், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்த மாநகராட்சியின் கட்டிடம் மற்றும் தொழிற்சாலை துறை அதிகாரி ராஜீவ் குரவ் மற்றும் ஜூனியர் என்ஜினீயர் நரேஷ் லாட் ஆகிய 2 பேரை மாநகராட்சி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

Next Story