மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் பலி, 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் பலி, 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Aug 2018 9:45 PM GMT (Updated: 12 Aug 2018 8:49 PM GMT)

சிங்கம்புணரியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி கிழக்காட்டு ரோடு ஆர்.ஆர்.டி. நகர் பகுதியில் வசிப்பவர் பொன்னுத்தாய் (வயது50). இவர் குடும்பத்தினருடன் திருப்பத்தூர் அருகே வைரன்பட்டில் உள்ள சாய்பாபா கோவிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். முதல்வாகனத்தில் பொன்னுத்தாயின் மகள் திருமலைக்குமாரி, உறவினர் விஜி (33) மற்றும் 2 குழந்தைகள் சென்றனர். விஜி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்றொரு வாகனத்தில் பேச்சியப்பன், பொன்னுத்தாய் ஆகியோர் சென்றனர்.

திருப்பத்தூர் சாலையில் சிவபுரிபட்டி வகுத்துப்பிள்ளையார் கோவில் அருகே செல்கையில் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

இதில் அதில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அதிர்ச்சியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுத்தாய் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு விஜி மற்றும் அவருடைய குழந்தைகள் ஜனனி மற்றும் பிரியதர்சினி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமலைக்குமாரி மற்றும் பொன்னுத்தாய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமலைக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story