திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்க வலியுறுத்தி நேற்று திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமா, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், நந்தகுமார், வெங்கடேஷ், ஜோசப்பின் உள்பட ஏராளமான அரசு டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று அங்கும் கண்டன கோசங்களை எழுப்பினார்கள். இதையடுத்து இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் மேட்டு தெருவில் 100-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story